வாலிபருக்கு ஓராண்டு சிறை

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் ஒண்டிவீரன் நகர் முனியசாமி மகன் சிவா 25. இவரது வீட்டருகே ராமேஸ்வரம் ஜீவாநகரை சேர்ந்த ஸ்டாலின் மகன்கள் விஜய், நம்புவேல் மற்றும் பன்னீர் செல்வம் மகன் விஜயசங்கர் ஆகியோர் 2024 ஏப்.,2ல் மது அருந்தியுள்ளனர். இதை சிவா மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். அதற்கு 3 பேரும் ஜாதியை சொல்லி திட்டியுள்ளனர்.

விஜயசங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ராமேஸ்வரம் நகர் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். வழக்கின் விசாரணை ராமநாதபுரம் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே புகாரளித்த சிவா மற்றும் கைது செய்யப்பட்ட விஜய் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தனர். வழக்கை விசாரித்த நீதிமதி மோகன்ராம் விஜய சங்கருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement