முதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
கோவையில் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேனி சிறையில் இந்து 17 பேர் தப்பிய நிலையில் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். 13 பேரை பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சிறையில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு செய்யப்படும்.
முதல்வர் விஜய் தனது மேசையில் இருந்த 3 பைல்களில் ஒரு பைலை ஓபன் செய்துவிட்டார். பைலை திறக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சவால் விட்டார். பைலை திறந்துவிட்டோம். ஒரு கோப்பை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கை து செய்யப்பட்டு உள்ளார். இன்னும் பல கோப்புகள் விசாரணையில் இருக்கிறது.
குழந்தை பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.400 கோடி வரை முறைகேடு செய்துள்ளனர். பார்டி பண்ட் வாங்கியதில் ஊழல் நடந்ததற்கு மகேஷ் வழக்கே ஒரு உதாரணம். மகேஷை காவலில் எடுத்து விசாரித்தால் தான் பல பேர் வந்து தைரியமாக புகார் அளிப்பார்கள். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கோவையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (31)
நான் தற்குறி அல்ல - ,
27 அக்,2026 - 14:28 Report Abuse
முதலில் தங்கள் துறையில் உள்ள குறைகளுக்கு பதில் அளிக்க முயலுங்கள் அமைச்சரே...! 0
0
Reply
Rajan - ,இந்தியா
27 அக்,2026 - 13:37 Report Abuse
விடியல் சார் எப்போது கைது ? 0
0
Reply
ramesh - chennai,இந்தியா
27 அக்,2026 - 13:22 Report Abuse
விலை வாசி உயர்வில் இருந்து மக்களை திசை திருப்ப திடீர் கைது . இருந்தாலும் மக்கள் விலைவாசி உயர்வுக்கு காரணமானவர்களை மறக்க மாட்டார்கள் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
27 அக்,2026 - 13:20 Report Abuse
கைது ஒரு அரசியல் பழிவாங்கல் ?? அப்படின்னா 2031 ல மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து அவங்க மேல அவங்களே நடவடிக்கை எடுத்துக்குவாங்களா ?? 0
0
Reply
ramesh - chennai,இந்தியா
27 அக்,2026 - 13:18 Report Abuse
நாளை ஆட்சி மாறும் பொது இதே போல பைல்கள் திறக்கும் . அதற்கும் தயாராக இருங்கள் . 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
27 அக்,2026 - 12:19 Report Abuse
அரசியல் களம் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், கோப்புப் பரிசீலனைகள் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பாக பொதுவெளியில் பல்வேறு எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் எழுவது இயல்பான ஒரு விஷயமாகும்.
விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகள் ஆதாரங்களின் அவசியம்: ஊழல் புகார்கள் அல்லது முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை விசாரிக்கும் போது, குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வமான சாட்சியங்கள் தேவைப்படுகின்றன,
கட்டம் கட்டமான நடவடிக்கை: ஒரே நேரத்தில் பல பெயர்கள் அல்லது கோப்புகளை விசாரிப்பதை விட, ஒவ்வொரு கோப்பு மீதான விசாரணையும் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டு, உறுதியான ஆதாரங்கள் கிடைத்த பின்னரே சட்டப்படியான நடவடிக்கைகள் கைது அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்தில் வழக்குகள் பலமாக இருக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் விவாதங்கள் எதிர்க்கட்சிகளின் அழுத்தம்: எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் தரப்பிலிருந்து முறைகேடுகள் மீது விரைவான மற்றும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்படுவதுண்டு,
சட்டத்தின் ஆட்சி: எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் இந்தியச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நீதித்துறையின் சோதனைகளை எதிர்கொள்ளும் வகையில் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
அரசியல் சூழலில் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் முறைகேடுகள் மீதான துரித நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆட்சி மாறும்போது காட்சிகளும் மாறும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்....நன்று . 0
0
Reply
Krishnan - Coimbatore,இந்தியா
27 அக்,2026 - 12:06 Report Abuse
இவர்கள் எதிர் கட்சிகளை குறை கூறியே 5 வருடத்தை ஓட்டி விடுவார்கள் போல, ஒரு பைலை ஓபன் பண்ணியதை பற்றி பேசுகிறார் ஆனால் 17 கைதிகளை கோட்டை விட்டு விட்டனர். இதற்கு முதல்வர் என்ன விளக்கம் தரப்போகிறார்? எப்படி அவ்வளவு பெரிய சுவரை தாண்டி போனார்கள்? அதுவரை மற்ற காவலர்கள் என்ன செய்தார்கள்? இல்லை இரவு நேர பணிக்கு காவலர் இல்லையா? மிக எளிதாக தப்பித்து விட்டனர் என்று சொல்லுவது சரியான அரசியல் ஆளுமை அல்ல. எதிர்க்கட்சிகளை குறை சொல்லுவதை தவிர்த்து அரசியல் ஆளுமையில் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் இடை தேர்தலில் கோட்டை விட்டு விடுவீர்கள். 0
0
Reply
Kulasekaran A - ,
27 அக்,2026 - 11:30 Report Abuse
திமுகவினர் இதைப் போல் எத்தனையோ வழக்குகளைப் பார்த்தவர்கள். நிச்சயம் விடுதலை ஆகிவிடுவார்கள். அல்லது ஆட்சி மாற்றம் வரும் வரை இந்த வழக்கு உச்ச நீதிமன்ற முழு அமர்வு வரை கொண்டு செல்லப்படும். எனவே இப்படிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து ஆட்சியில் கவனம் செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் 0
0
Reply
பிரேம் குமார் - ,
27 அக்,2026 - 11:22 Report Abuse
தேனி சிறையில் தப்பித்த 17 கைதிகளை (நான்கு கைதிகள் தற்போது பிடிபட்டதாக கூறப்பட்டுள்ளது) பற்றி விபரங்களை நிருபர்கள் கேட்டபோது தமிழக சட்ட அமைச்சர் அதைப்பற்றி விபரமாக பேசாமல் நேற்று கைதான முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பற்றி நீண்ட விளக்கம் தரவே முயற்சிக்கிறார். அன்பில் மகேஷ் கைதான பிறகு இனி அது குறித்து காவல்துறையும் நீதிமன்றமும் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தில் மாநில அமைச்சர் விளக்கம் தர வேண்டிய அவசியமே இல்லை. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
27 அக்,2026 - 11:02 Report Abuse
கொடுக்கபட்ட பார்ட்டி பண்டு எல்லாம் கறுப்புப் பணம். அப்பாவி பெற்றோரிடம் கசக்கிப் பிழிந்து வசூலிக்கப்பட்ட சிறப்புக் கட்டணங்கள். அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. லஞ்சம் கொடுத்த ஆட்களும் பணம் வந்த வழியைச் சொல்ல முடியாது. வழக்கு எப்படி தேறும்? அரசகுமார் தன்னிடம் பணம் கொடுத்த அனைவரின் விவரங்களையும் கொடுத்தாலும் பள்ளித் தாளாளர்கள் சாட்சி சொல்ல முன்வருவது அரிது. எளிதல்ல. 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
-
மழையின் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
-
நான்கு மாதங்களுக்கு பிறகு தொகுதிக்கு வந்த எம்.எல்.ஏ.,
-
பஜாரில் சிறுத்தை உலா பேஜாரான உள்ளூர் மக்கள்
-
ஏழு தாசில்தார்கள் டிரான்ஸ்பர்
-
வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
நிலத்தில் முதலீடு செய்தால் தங்கம் பரிசு ரூ. 50 லட்சம் சுருட்டிய மூவர் சிக்கினர்
Advertisement
Advertisement