மத்திய கிழக்கு போர் மீண்டும் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை; புதிய சூழல் உருவாவதாக ஈரான் தகவல்
-நமது நிருபர்-
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காகவும், மேலும் ஒரு போர் வெடிப்பதைத் தடுப்பதற்காகவும் நான்கு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெஹ்ரானில் நடந்த கூட்டத்தில், சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் துருக்கிய உளவுத்துறை தலைவர் இப்ராஹிம் கலின் ஆகியோர் பங்கேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்தனர்.
பிராந்திய பாதுகாப்பு, அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்புகளின் விளைவுகள் மற்றும் பாலஸ்தீன-லெபனான் மக்களுக்கு ஆதரவளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நாடுகள் உடனான விவாதங்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஈரான், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.
சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் டெஹ்ரானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பிராந்தியத்தில் ஒரு புதிய சூழல் உருவாகி வருகிறது என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்தார். ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கில் எந்தவொரு பதற்றமும் ஏற்படாமல் தடுப்பது அவசியம். ஈரான் மீது ஒரு பெரும் ராணுவத் தாக்குதலும், வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஒரு பெரும் ராணுவத் தாக்குதலையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நெற்கதிர் அறுவடை திருவிழா
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!
-
ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்; இந்தியா வலியுறுத்தல்
-
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு
-
ஒன்றுக்கும் உதவாத அரசு; அவல நிலையில் தமிழகம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
தவறு செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை; திமுக மாஜி கைதுக்கு அண்ணாமலை வரவேற்பு