முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் முளைக்குமா: இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், வயல்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் நேரடி விதைப்பு செய்ததால் விதை நெல் முளைக்குமா

என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில வாரங்களாக விவசாயிகள் வயல்களில் விதை நெல்களைத் துாவி நேரடி விதைப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒரு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவழித்த நிலையில்

எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விதைத்த நெல்

விதை முளைத்து பயிராகுமா என்ற கவலையில் விவசாயிகள் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இளையான்குடியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 109 மி.மீ., மழை மானாமதுரையில் 80 மி.மீ., சிவகங்கையில் 70.60 மி.மீ.,

திருப்புவனத்தில் 23. 20 மி.மீ., காரைக்குடியில் 11 மி.மீ., தேவகோட்டையில் 7.20., மி.மீ., காளையார்கோயிலில் 94.60 மி.மீ., சிங்கம்புணரியில் 29.40 மி.மீ., மழை பெய்துள்ளது இந்த மழையால் இளையான்குடி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது.சிவன் கோயில் அருகே உள்ள சமுத்திர ஊரணிக்கும் நீண்ட மாதங்களுக்கு பிறகு தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வயல்வெளிகளிலும்,தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயப் பணிகளுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதால்

மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில், வயல்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் விதைக்கப்பட்ட விதை

நெல் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கினால், விதைகள் அழுகி முளைப்புத் திறன் பாதிக்கப்படுமோ என்றும்

இதனால் மீண்டும் விதைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement