வைகை ஆற்றில் பரவும் கழிவு நீர் நிலத்தடி நீர் மாசடையம் அபாயம்
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் ஒட்டுமொத்த நகரின் கழிவு நீரும் பாயும் சூழலில் நிலத்தடி ஊற்று நீரிலும் பரவும் அபாயம் உள்ளது.
பரமக்குடி நகராட்சியில் பெரும்பாலான வார்டுகள் வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் இருக்கிறது. வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, மஹால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் கழிவுகள் வைகை ஆற்றில் கலக்கிறது. துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில் வைகையில் கழிவுநீர் கலக்காமல் சுத்திகரிக்கும் நோக்கில் பைப் லைன்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரங்களில் சென்று வந்த கழிவு நீர் ஒட்டுமொத்தமாக நடு ஆற்றிலே கலக்குமாறு வழி செய்துள்ளனர். இதனால் காட்டுபரமக்குடி துவங்கி நகராட்சி பின்புறம், முத்தாலம்மன் கோயில், பெருமாள் கோயில் படித்துறைகள், தரைப்பாலம் அருகில் என கண்ணுக்கெட்டும் துாரம் கழிவு நீர் நிரம்பியுள்ளது.
முக்கியமாக சுந்தர் நகர் பெருமாள் கோயில் எதிரில் சித்திரை திருவிழா நடக்கும் இடம் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் கழிவு நீர் பரவியுள்ளது. இதனால் சுகாதாரக் கேடான சூழலில் நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகரின் நீராதாரமாக உள்ள வைகை ஆற்றை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை
-
4-வது ஆண்டாக தேசிய விருதுகளை வென்ற ஈஷா வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்!
-
முதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
மத்திய கிழக்கு போர் மீண்டும் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை; புதிய சூழல் உருவாவதாக ஈரான் தகவல்
-
சிறையில் முதல்வர் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? இபிஎஸ் விமர்சனம்