சந்திராகச்சி – மங்களூரு ரயில் ஷாலிமார் ஸ்டேஷனுக்கு மாற்றம்
சேலம்: சந்திராகச்சி – மங்களூரு விவேக் வார ரயில், இனி பெயர் மாற்றப்பட்டு, சந்திராகச்சி ஸ்டேஷனுக்கு பதில், ஷாலிமர் ஸ்டேஷனிலிருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சந்திராகச்சி – மங்களூரு விவேக் வார ரயில், மேற்கு வங்க மாநிலம், ஹவுரா அருகில் உள்ள சந்திராகச்சி ஸ்டேஷனிலிருந்து வியாழக்கிழமை மதியம், 2:55 மணிக்கு கிளம்பி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே சனிக்கிழமை காலை, 8:50 மணிக்கு மங்களூரு வந்து கொண்டிருந்தது.
இந்த ரயில், அக்., 29 முதல் சந்திராகச்சி ஸ்டேஷனுக்கு பதில், ஷாலிமார் ஸ்டேஷனிலிருந்து வியாழன் மதியம், 2:30 மணிக்கு கிளம்பும். மறு மார்க்க ரயிலான மங்களூரு – சந்திராகச்சி விவேக் வார ரயில், சனிக்கிழமை இரவு, 11:00 மணிக்கு கிளம்பி, சேலம் வழியே சென்று, திங்கட்கிழமை மாலை, 6:00 மணிக்கு சந்திராகச்சி சென்றடைந்தது.
அக்., 31 முதல், ஷாலிமார் ரயில் நிலையத்துக்கு செல்லும். ரயிலின் பெயரும் மங்களூரு – ஷாலிமார் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் என மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு
-
ஒன்றுக்கும் உதவாத அரசு; அவல நிலையில் தமிழகம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
தவறு செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை; திமுக மாஜி கைதுக்கு அண்ணாமலை வரவேற்பு
-
தாறுமாறாய் அல்ல; தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம் தவெக அரசியல் பாதை; அமைச்சர் அருண்ராஜ்
-
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது; அதி தீவிரமானது அர்னாப் புயல்
-
இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு