தீபாவளிக்கு ரூ.8,000 போனஸ் என ‘ஜி – பே’ பெயரில் நுாதன மோசடி
சென்னை: ‘‘தீபாவளியை முன்னிட்டு, ‘ஜி – பே’ சார்பில், 8,000 ரூபாய் போனஸ் வழங்குவதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும், போலி இணையதள இணைப்பை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம்,’’ என, சைபர் வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.
‘ஜி – பே’ நிறுவனம் சார்பில், தீபாவளியையொட்டி பொதுமக்களுக்கு, 8,000 ரூபாய் போனஸ் வழங்குவதாக, சமூக வலைதளத்தில் போலியான இணையதள, ‘லிங்க்’ கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.
‘ஜி – பே தீபாவளி பரிசு ரூ. 8,000’ என்ற பெயரில் பரவும், அந்த, ‘லிங்’கை பயன்படுத்தி, ஏற்கனவே பலர் போனஸ் பெற்றுள்ளதாகவும், மற்றவர்களும் அதை பெற, உடனடியாக இணைப்பை திறக்கும்படியும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ‘லிங்கை’ திறந்தவுடன், பொதுமக்களை நம்ப வைக்கும் வகையில், அதன் முகப்பு பக்கத்தில், இதுவரை 11 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர், தீபாவளி பரிசாக 8,000 ரூபாய் பெற்றுள்ளனர்.
நீங்களும் உடனே பணத்தை பெற, ‘கிளிக்’ பொத்தானை அழுத்துங் கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை அழுத்தினால், அடுத்தகட்டமாக, ‘ஜி – பே’ எண்ணுடன் இணைக்கப்பட்ட, நமது மொபைல் எண்ணை பதிவிடும்படி கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த இணைப்பை, 15 நபர்களுக்கு பகிர வேண்டும். அவ்வாறு பகிர்ந்தால், உடனடியாக, 8,000 ரூபாய் பெறலாம் என, ‘லிங்க்’கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜி – பே’ நிறுவனம் சார்பில், இது போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சமூக வலைதளத்தில் பரவி வரும், போலி இணையதள, ‘லிங்க்’கை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என, சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, ‘சைபர் சொசைட்டி ஆப் இந்தியா’ தலைவர் பாலு கூறியதாவது:
‘ஜி – பே’ நிறுவனம் பெயரில், தற்போது சமூக வலைதளத்தில் பரவும், ‘லிங்’ போலியானது. இது, சைபர் மோசடிதாரர்களின் சூழ்ச்சி. பொதுமக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம்.
இந்த, ‘லிங்க்’கை நம்பி, ‘ஜி – பே’ நம்பர், ஓ.டி.பி., – யு.பி.ஐ., உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்தால், நிதி மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் இதை தவிர்க்க வேண்டும்.
அதே நேரத்தில், சைபர் மோசடிக்கு ஆளானவர்கள், உடனே 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை
-
4-வது ஆண்டாக தேசிய விருதுகளை வென்ற ஈஷா வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்!
-
முதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
மத்திய கிழக்கு போர் மீண்டும் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை; புதிய சூழல் உருவாவதாக ஈரான் தகவல்
-
சிறையில் முதல்வர் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? இபிஎஸ் விமர்சனம்
-
அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க.. ராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடாத தராசுகள் பொருட்கள் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்