ரூபி கன்ஸ்ட்ரக்ஷன்–ஆண்டனி பள்ளி இல்ல திருமணம் மணமக்களை சபாநாயகர் பிரபாகர் வாழ்த்து

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த ரூபி கன்ஸ்ட்ரக்ஷன் இல்ல திருமண விழாவில், சபாநாயகர் பிரபாகர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விருத்தாசலம் ரூபி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர், இன்ஜினியர் சாமுவேல் கென்னடி – ஆசிரியர் பிரிஸ்கில்லா எப்சிபா தம்பதியரின் மகள் மருத்துவர் ஷைனி ரூபினாவிற்கும், ஆண்டனி பப்ளிக் பள்ளி தாளாளர் ஜார்ஜ் யுவராஜ் – முதல்வர் லிடியா ஜெயந்தி ஆகியோரின் மகன் இன்ஜினியர் ஜோசப் ரிச்சி ஜார்ஜ் என்பவருக்கும், விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலையத்தில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தை தமிழக சபாநாயகர் பிரபாகர் தலைமை தாங்கி, நடத்தி வைத்தார்.

தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் விஜயகுமார், ஆசிரியர் ஜீவா விஜயக்குமார், இன்ஜினியர் ஜெய்சன் செல்வராஜ், சுவாதிகா, ரியோ ஜார்ஜ் வரவேற்றனர்.

இதில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த், ஜெயப்பிரியா ஜெய்சங்கர், நேஷனல் நாகூர் கனி, வழக்கறிஞர் அருள்குமார், நகராட்சி கவுன்சிலர் சிங்காரவேல், மருத்துவர்கள் அஜித்குமார் – தேவதர்ஷினி, வழக்கறிஞர் விக்னேஷ் குமார், ஆம்ஸ்ட்ராங், ஹெலன் கமலா, முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் கலைச்செல்வன், ராதாகிருஷ்ணன், பிரிட்டோ மேரி, த.வெ.க., மாவட்ட செயலாளர் விஜய், நகர செயலர் அப்பாஸ் அலி, சேலம் மறைமாவட்ட ஆயர் ராயப்பன் அருள்செல்வன், புதுச்சேரி மறைமாவட்ட விகார் ஜெனரல் குழந்தைசாமி, ஜோசப் அருமை செல்வம், மரியா ஆண்டனி, ஜான் பிரிட்டோ மற்றும் த.வெ.க., நிர்வாகிகள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement