தேசிய பாடி பில்டர் போட்டி: போலீஸ் ஏட்டு சாதனை

விழுப்புரம்: வோலுாரில் நடந்த தேசிய அளவிலான பாடி பில்டர் போட்டியில், விழுப்புரம் போலீஸ் ஏட்டு முதலிடம் பிடித்து சாதித்தார்.

வேலூரில் கடந்த 18ம் தேதி தேசிய அளவிலான பாடி பில்டர் (உடற் கட்டமைப்பு) போட்டி நடந்தது. இப்போட்டியில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு வெங்கடேசன் 80 கிலோ எடை பிரிவில் பங்கேற்று, முதலிடம் பிடித்து சாதித்து பரிசு, பதக்கம் வென்றார்.

இதே போல், நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடந்த பாடி பில்டர் போட்டியிலும் இரண்டாம் பரிசு வென்று சாதித்தார்.

பரிசு வென்ற ஏட்டு வெங்கடேசனை, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., மதிவாணன் பாராட்டினார்.

Advertisement