நிலச்சரிவில் பலியான டிரைவர் இரங்கல் தெரிவிக்காத முதல்வர்: அ.தி.மு.க., கண்டனம்
ஊட்டி: குன்னுார் பர்லியார் அருகே உயிரிழந்த அரசு பஸ் டிரைவரின் குடும்பத்தாருக்கு அரசு இரங்கல் தெரிவிக்காததற்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., நீலகிரி மாவட்ட செயலாளர் பாலநந்த குமார் நிருபர்களிடம் கூறுகையில்,‘ நீலகிரியில் இரு நாட்களுக்கு முன்பு, பெய்த கனமழையின் போது, மண் சரிவில் சிக்கி, அரசு போக்குவரத்து கழக டிரைவர் ஜனகராஜ் உயிரிழந்தார். மாநில அரசு சார்பில் இரங்கல் செய்தி கூட இதுவரை தெரிவிக்கவில்லை. உயிரிழந்த ஜனகராஜின் குடும்பத்திற்கு நிவாரண தொகை கூட அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்கு, நீலகிரி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க., அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும், மாவட்ட அ.தி.மு.க ., கடும் கண்டனம் தெரிவிக்கிறது. உடனடியாக ஜனகராஜின் குடும்பத்தாருக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,’’ என்றார்.
மேலும்
-
இளம் நாட்டிய கலைஞர்கள் முதல்வரிடம் வாழ்த்து
-
சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனகருவி விநியோகஸ்தர்கள் – விவசாயிகள் சந்திப்பு
-
என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பினரின் வேலை நிறுத்த நோட்டீஸ் கோரிக்கை மனுவாக மாறியது
-
கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு மரத்தில் கார் பாய்ந்ததால் பரபரப்பு
-
கொத்தனாரை வெட்டிய முன்னாள் காதலி கைது
-
விதிமீறல் கட்டடங்களுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்