கொத்தனாரை வெட்டிய முன்னாள் காதலி கைது
நாகர்கோவில்: கொத்தனாரை அரிவாளால் வெட்டிய முன்னாள் காதலி தங்கமலர், 26, உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே தெற்கு புத்தளத்தை சேர்ந்தவர் விவேக், 27. கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு, புத்தளம் அருகே பைக்கில் சென்றபோது, அவர் மீது ஒரு கார் மோதியது.
இதில், கீழே விழுந்த விவேக்கை, காரில் இருந்து இறங்கிய கும்பல், அரிவாளால் வெட்டி, தப்பியது. இதில், பலத்த காயமடைந்த விவேக், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுசீந்திரம் போலீசார் விசாரித்தனர்.
அதில், விவேக்கும், தங்கமலரும் காதலித்துள்ளனர். இதற்கிடையில் தங்கமலருக்கும், பழவினை பூவன் குடியிருப்பை சேர்ந்த கப்பல் ஊழியர் திவேக், 28, என்பவருக்கும் செப்., 23-ல் திருமணம் நடந்தது.
இதை அறிந்த விவேக், தங்கமலரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த விரோதத்தில், திவேக், தங்கமலர், சுயம்புலிங்கம், 32, தங்கச்செல்வன், 24, ஆகியோர், காரில் வந்து, விவேக்கை வெட்டி கொல்ல முயன்றது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், திவேக், தங்கமலர், தங்கச்செல்வன் ஆகியோரை கைது செய்து, சுயம்புலிங்கத்தை தேடுகின்றனர்.
மேலும்
-
காங்-தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு; வீடியோ வெளியிட்டு பாஜ கண்டனம்
-
தாமதமாக துவங்கிய மழை நெல் நாற்றுக்கு தட்டுப்பாடு
-
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வரவேற்பு
-
காணாமல் போன வரத்து கால்வாய்
-
அலுவலகங்கள் திறப்பு
-
சிறைகளில் என்னென்ன பாதுகாப்பு: சிறு அலட்சியமும் தீவிரமாக கருதப்படும் என டி.ஜி.பி., எச்சரிக்கை