விதிமீறல் கட்டடங்களுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்
வால்பாறை: வால்பாறையில் விதிமீறல் கட்டடங்களை, அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில், சமீப காலமாக விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, 'சோலையாறு அணை பகுதியில், 53 அனுமதியற்ற கட்டடங்களுக்கு, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்' என, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து, இரண்டு கட்டமாக நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால், பெரும்பாலான தங்கும்விடுதி உரிமையாளர்கள், உரிய ஆவணங்களை நகராட்சி வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினர். வால்பாறை தாசில்தார் அரசகுமார், நகராட்சி கமிஷனர் வெங்கடலட்சுமணன் ஆகியோர் தலைமையில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத, ஐந்து தங்கும் விடுதிகளை, போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு செய்து, பூட்டி 'சீல்' வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement