ஆபாச வீடியோ காட்டி தொல்லை கணவனை கொன்ற மனைவி கைது

நாகர்கோவில்:

ஆபாச வீடியோக்களை காண்பித்து, பாலியல் தொல்லை கொடுத்த கணவர் சுரேஷ், 43, என்பவரை, கழுத்தை இறுக்கி கொலை செய்த அவரது மனைவி பாரதி, 37, கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், இறச்சக்குளத்தை சேர்ந்தவர் ரவுடி சுரேஷ். இவரது மனைவி பாரதி. த.வெ.க., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர். தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

அக்., 23ல் சுரேஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக, அவரது உடலை அடக்கம் செய்ய முயற்சித்த போது, ‘வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்’ எனக்கூறி, போலீசார், உடலை கைப்பற்றினர்.

இதில், ‘சுரேஷ் கழுத்தை நெரிக்கப்பட்டது’ தெரியவந்தது. விசாரணையில், பாரதி, சுரேஷை கொலை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

தினமும் இரவில், மதுபோதையில், மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை காட்டி, சிகரெட்டால் சூடு வைத்து பாலியல் சித்ரவதை செய்ததால், மொபைல் போன் சார்ஜர் ஒயரால், கழுத்தை இறுக்கி கொன்றதாக, பாரதி வாக்குமூலம் அளித்துள்ளார் .

இந்த சம்பவத்தில், பாரதியுடன், அவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 13 வயது மகனும் உடந்தையாக இருந்ததாக கூறி, அவரும் கைது செய்யப்பட்டார்.

Advertisement