சிதம்பரத்தில் 30ம் தேதி ரயில் மறியல் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி வரும் 30ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், வர்த்தக சங்கம், அனைத்து கட்சியினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மூசா, முத்துக்குமரன், ரயில் பயணிகள் சங்க தலைவர் அப்துல் ரியாஸ், வீரப்பன், அ.தி.மு.க., முத்து, காங்., குமார், வி.சி., தமிழ்வளவன், ஆதிமூலம், மனிதநேய ஜனநாயக கட்சி பைசல் , பா.ம.க., கார்த்திகேயன், ம.தி.மு.க., பார்த்திபன், குமார், ஜனநாயக கட்சி சாகுல், வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஜனசபாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும், ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை இரு மார்க்கங்களிலும் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் சேது விரைவு ரயிலை சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30 ம் தேதி ரயில் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தை அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்று திரட்டி வெற்றிகரமாக நடத்துவது. அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்தால், கோரிக்கை நிறைவேற்றாமல் செல்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement