இல்லாத மின்சாரத்தை மக்களுக்கு எப்படி இலவசமாக கொடுப்பீர்கள்; சீமான் கேள்வி
சிவகங்கையில் அவர் அளித்த பேட்டி:
அரிசி, பால், பருப்பு, சர்க்கரை விலைகள் ஏறிவிட்டது. மின்கட்டணம் பலமடங்கு ஏறிவிட்டது. 20 ரூபாய் ஒரு யூனிட்டுக்கு வாங்கினவரே, இரு மடங்கு, மும்மடங்கு கட்டணத்தை உயர்த்திவிட்டு போய்விட்டார்.
இப்போது நீங்கள் (தவெக அரசு) 35 ரூபாய்க்கு வாங்கினீர்கள் என்றால் நிலைமை என்னாகும்? கட்டணத்தை உயர்த்துவீர்கள். என்னதான் நீங்கள் உயர்த்தினாலும் பற்றாக்குறை வரும்.
மின்சாரமே இல்லாத ஊரில் இலவச மின்சாரம் தருவேன் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமா? இல்லையா? 8 மணி நேரம் அங்கீகரிக்கப்பட்ட மின் தடையை அரசு அறிவித்திருக்கிறதா? இல்லையா?
8 மணி நேரம் மின்சாரம் தராத போது, இலவச மின்சாரம் தருவேன் என்று கூறுவது ஏமாற்றுதல். ஆவினை தான் ஒழித்து விட்டீர்கள். அதில் கிடைக்கும் வருவாய் நின்று போனதே. கர்நாடகாவில் இருந்து நந்தினி, ஆந்திராவில் இருந்து திருமலை, குஜராத்தில் இருந்து அமுல் ஆகிய இடங்களில் இருந்து பாலை எடுத்துக் கொண்டு ஆவினை மூடிவிட்டீர்கள்.
இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.
மேலும்
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்