பேரிடர் கால மீட்புக்கான உபகரணங்கள் தயார்: எஸ்.பி., பார்வை
கள்ளக்குறிச்சி: வடக்கிழக்கு பருவமழையொட்டி கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள பேரிடர் கால மீட்புக்கான உபகரணங்களை எஸ்.பி., ஷஹ்னாஸ் பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. அதிகம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பல்வேறு துறைகள் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நீர் நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது. சாலையோர மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் லாரி டியூப் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்வது உட்பட பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை உடனடியாக சரிசெய்யும் பொருட்டு கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் பல்வேறு வகையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். உபகரண பொருட்களை எஸ்.பி., ஷஹ்னாஸ் பார்வையிட்டார்.
மேலும்
-
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
-
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
-
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
-
விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி
-
கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு