காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கல்: பிளிங்கிட் கிடங்கு உரிமம் அதிரடியாக ரத்து
மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள பிவண்டியில் இயங்கி வரும் பிளிங்கிட் சேமிப்பு கிடங்கில், முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட, ரூ.32.71 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்கள் கைபற்றப்பட்டதை அடுத்து, அதன் உரிமத்தை மஹாராஷ்டிர உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்புத்துறை கமிஷனராக பொறுப்பேற்றுள்ள துக்காராம் முண்டே ஐ.ஏ.எஸ்., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது நேர்மையான நடவடிக்கையை பாராட்டியுள்ள மக்கள், அவரை ‛ஐஏஎஸ் சிங்கம்' என அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்நிலையில், அவரது அதிரடி நடவடிக்கையில் ஒரு பகுதியாக, ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்து வரும், பிளிங்கிட் நிறுவனத்தின் பிவண்டி சேமிப்பு கிடங்கில், மஹா., உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அம்பலமான குளறுபடி:
சோதனையின் போது, விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான, சேதமடைந்த 18,405 உணவுப் பொருட்கள் அங்கு இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.32.71 லட்சம். உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி, காலாவதியான பொருட்களை முறையாக அழிக்காமலும், உரிய விதிகளை பின்பற்றாமலும் நடந்த, பிளிங்கிட் - பிவண்டி சேமிப்பு கிடங்கு உரிமத்தை, மஹா., உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாக ரத்து செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காலாவதியான பொருட்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விற்கப்பட்டதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. கிடங்கில் உள்ள பொருட்களை, வேறு இடத்திற்கு மாற்ற கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
துக்காராம் முண்டேவின் அதிரடி சோதனைகளில், ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜொமாட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கிடங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பிளிங்கிட் மீதும் ‛ஐஏஎஸ் சிங்கம்' அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Only such persons deserve Padma Awards not film stars who earn crores.
பணத்திற்கு அடிபணியாத நேர்மைக்கு ராயல் சல்யூட்
இவர்தான் உண்மையான நியாயமான அதிகாரி. இங்கே யும் இருக்கிறார்களே வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.
அஞ்ச நெஞ்சம் படைத்த இவரைப் போன்ற IAS அதிகாரிகள் தான் நாட்டிற்கு தேவை.ரிலையன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க துணிவு வேண்டும்.மேலும்
-
தரமின்றி கட்டுமான பணிகள் கடலுாரில் மக்கள் போராட்டம்
-
சிறப்பு பக்கத்திற்கு.................. கடலுார் பெரியார் கல்லுாரியை அரசு கல்லுாரியாக மாற்றுவேன் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
-
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி
-
ஆட்டோ தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
-
சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்: மாணவிகளுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ‘அட்வைஸ்’