ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி
விழுப்புரம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அரசு ஊழியர் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் தியாகராஜன்,65; தமிழக அரசு போக்குரவத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் தனது குடும்பத்தோடு வீட்டை பூட்டி கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரு சென்றார். பின், குடும்பத்தோடு நேற்றிரவு 2:00 மணிக்கு வீட்டிற்கு வந்த போது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், அவர்களை கண்டதும் தப்பியோடினார். பின், தியாகராஜன் வீட்டிற்கு சென்ற போது, மரக்கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பிரோ லாக்கரை உடைத்து திருட முயன்றது தெரிந்தது.
பீரோவில் இருந்த நகைகளை தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் வெளியூருக்கு அணிந்து சென்றதால், திருடு போகாமல் தப்பின. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
இல்லாத மின்சாரத்தை மக்களுக்கு எப்படி இலவசமாக கொடுப்பீர்கள்; சீமான் கேள்வி
-
பேரிடர் கால மீட்புக்கான உபகரணங்கள் தயார்: எஸ்.பி., பார்வை
-
அறிவிக்கப்படாத 'திடீர்' மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வலியுறுத்தல
-
சிதம்பரத்தில் 30ம் தேதி ரயில் மறியல் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
-
ரயில் பெட்டிகளில் இரவு 11:00 மணிக்கு சார்ஜிங் வசதி 'கட்'
-
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்