ஆட்டோ தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: ஆட்டோ தொழிலை நெருக்கடியில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு திட்டம் தீட்ட வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யு.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேசன், செயலாளர் முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சேகர், துணை தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தினசரி மானிய விலையில் ஆட்டோவிற்கு 5 லிட்டர் எரிபொருள் வழங்குதல், மீட்டர் கட்டணத்தை உடனே அறிவித்தல், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் என்பன, உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை
Advertisement
Advertisement