அரசு போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வரவுக்கும் - செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழங்க வேண்டும்.
தனியார் மூலம் மின்சார பஸ்களை இயக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு ஒப்பந்-தப்படியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒப்-பந்த பணியாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் முருகையா, சம்மே-ளன உதவி செயலர் வேளாங்கண்ணிராஜ், மண்-டல பொது செயலர் ஜான்சன் கென்னடி, ஜெக-நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
4-வது ஆண்டாக தேசிய விருதுகளை வென்ற ஈஷா வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்!
-
முதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
மத்திய கிழக்கு போர் மீண்டும் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை; புதிய சூழல் உருவாவதாக ஈரான் தகவல்
-
சிறையில் முதல்வர் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? இபிஎஸ் விமர்சனம்
-
அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க.. ராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடாத தராசுகள் பொருட்கள் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் முளைக்குமா: இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை