நாயோடை நீர்த்தேக்க வாய்க்காலில் நீர்வரத்து

கன்னிவாடி: சமீபத்திய சாரல் மழையால் கன்னிவாடி நாயோடைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. கன்னிவாடி பேரூராட்சி, கசவனம்பட்டி, கோனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு இங்குள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த்தேக்கம் போதிய பராமரிப்பின்றி துார்ந்துள்ளது. மொத்த பரப்பில் 40 சதவீதத்திற்கும் கூடுதலான பகுதிகள் ஆக்கிரமிப்பு விவசாயத்தில் சிக்கியுள்ளன. எல்லைக்கான குறியீட்டு கற்களும் ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.

நீர்ப்பிடிப்பு பகுதியில் சில நாட்களாக சாரல் மழை பெய்வதால் நீர்தேக்கத்திற்கான வாய்க்காலில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் வழித்தடத்தில் பரவலாக பெரிய பள்ளங்கள் மட்டுமே உள்ள சூழலில் அவற்றில் குட்டைபோல் தண்ணீர் தேங்குகிறது. குறிப்பிடத்தக்க தண்ணீர் நீர்த்தேக்கத்தை வந்தடையவில்லை.

Advertisement