தீபாவளிக்கு முன் தங்கம் வாங்குவோருக்கு நிம்மதி

2

புதுடில்லி: அமெரிக்க மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' தனது வட்டி விகிதத்தை 3.75 - 4 சதவீதம் என்ற அளவிலேயே மாற்றமின்றி வைத்துள்ளது. இதனால், இந்தியாவில் தங்கம் வாங்குவோருக்கு சற்று நிம்மதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் தங்கம் விலை குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே நீடிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், டிசம்பரில் அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பை பொறுத்தே தங்கம் வி லையில் அடுத்தகட்ட மாற்றம் இருக்கும். இந்தியாவில் பண்டிகை கால தேவை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அரசியல் பதற்றங்களும் விலையின் போக்கில் தாக்கத்தை ஏற் படுத்தும்.

விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் சூழலில், மொத்த தேவைக்கான தங்கத்தையும் ஒரே நேரத்தில் வாங்குவதற்கு பதிலாக, தேவைக்கேற்ப படிப்படியாக வாங்குவது விலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement