ஸ்டார்ட் அப், ஏ.ஐ.எப்., பண்டுகளில் பி.எப்., பணத்தை முதலீடு செய்ய திட்டம்
புதுடில்லி: இ. பி.எப்.ஓ., நிறுவனத்தின் நிதியை 'ஸ்டார்ட் அப்' மற்றும் ஏ.ஐ.எப்., பண்டுகளில் முதலீடு செய்வதற்கு திட்ட மிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இ.பி.எப்.ஓ., பெறும் நிதியில் 3 சதவீதம் வரையிலான தொகையை மட்டும் 'கேட்டகிரி 1' மற்றும் 'கேட்டகிரி 2' ஏ.ஐ.எப்., திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கேட்டகிரி 1 ஏ.ஐ.எப்., திட்டங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் 'வென்ச்சர் கேபிட்டல்' ஆகியவற்றில் முதலீடு செய்கின்றன.
கேட்டகிரி 2 ஏ.ஐ.எப்., திட்டங்கள் ரியல் எஸ்டேட், பட்டியலிடப்படாத பங்குகள், பிரைவேட் ஈக்விட்டி, பிரைவேட் டெப்ட் பண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.
ஏற்கனவே, சமீபத்தில் தொடங்கப்பட்ட 'ஸ்டார்ட் அப் இந்தியா பண்டு ஆப் பண்ட்ஸ் 2.0' திட்டத்தில் இ.பி.எப்.ஓ., நிதியை முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சி துறை கோரிக்கை வைத்துள்ளது. இதுபற்றியும் இ.பி.எப்.ஓ., பரிசீலித்து வருகிறது.
இ.பி.எப்.ஓ., நிதியை ஸ்டார்ட் அப் பண்டுகள் மற்றும் ஏ.ஐ.எப்., திட்டங்களில் முதலீடு செய்வது பற்றி இன்னும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இ.பி.எப்.ஓ., நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில், இதுபற்றி ஆலோசனை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு