டிவிகளில் ஆபாச விளம்பரங்கள் முன்தணிக்கை செய்ய வழக்கு: அரசு தரப்பிற்கு உத்தரவு
மதுரை: பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன்கூடிய விளம்பரங்களை 'டிவி'களில் ஒளிபரப்ப தடை கோரியும், முன்தணிக்கைக்கு உட்படுத்தவும் தாக்கலான வழக்கில், இவ்விவகாரம் தொடர்பாக வழிகாட்டுதல்கள் எதுவும் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
ராஜபாளையம் சகாதேவராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: 'டிவி' சேனல்களில் ஆணுறை, ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருத்துவம், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள், உள்ளாடைகள் போன்ற விளம்பரங்களில் தேவையின்றி அரைகுறை ஆபாசங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை முன்தணிக்கை செய்யாமல் ஒளிபரப்புவது நாகரீக சமுதாயத்திற்கு நல்லதல்ல. ஆபாச காட்சிகளுடன்கூடிய விளம்பரங்கள் குழந்தைகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர்கள் பாலியல் ரீதியான குற்றங்கள், வன்முறையில் ஈடுபட வழிவகுக்கின்றன.
பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாச விளம்பரங்களை 'டிவி'களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். விளம்பரங்களை முன்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். விதிகளை மீறி இத்தகைய நிகழ்ச்சிகள், விளம்பரங்களை ஒளிபரப்பும் 'டிவி'கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார். 2020 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,‛பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன்கூடிய விளம்பரங்களை 'டிவி'களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.
நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு,‛இவ்விவகாரம் தொடர்பாக வழிகாட்டுதல்கள் எதுவும் உள்ளதா என்பது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலரிடம் விபரம் பெற்று அதன் தரப்பு வழக்கறிஞர் நவ.,19 ல் தெரிவிக்க வேண்டும்,'என உத்தரவிட்டது.
எந்த வெங்காயம் செய்யப்படுவதில்லை அவன் எல்லாம் எதற்கு இருக்கிறான் என்று தெரியவில்லை படத்தை ஒழுங்காக தனிக்க செய்து விட்டிருந்தால் இவ்வளவு வன்முறைகள் எல்லாம் வந்து இருக்காது
தவறான காட்சிகள், பாலுணர்வு, வன்முறை, குடும்பங்களில் குழப்பம் ஏற்படுத்தும் வழிமுறைகள் இவைகளுள்ள டீ வி சீரியல்களை சினிமாக்களும் தணிக்கை செய்யப்படவேண்டும் அல்லது தடை செய்யப்படவேண்டும்.
எதுவும் தணிக்கை செய்யப்படுவதில்லை. தொலைக்காட்சிகள் எவ்வித கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. பெண் பிள்ளைகள் குடிப்பதாக காட்டப்படுகிறது. அதாவது பெண்களை குடிகாரர்களாக மாற்ற தூண்டப்படும் நிகழ்வாக தான் பார்க்க முடிகிறது. காட்சிகள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுகிறது. விளம்பரங்கள் படு மோசமாக உள்ளது. கலாச்சார சீரழிவு ஏற்பட்டால் சமுதாயத்தில் நாம் யோசித்து பார்க்கக்கூட அளவிற்கு குற்றங்கள் நடக்கும். ஒரு கட்சியின் தொலைக்காட்சியை விட கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மீடியாக்கள் வரம்பை மீறுகின்றன.
2020 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,‛பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன்கூடிய விளம்பரங்களை டிவிகளில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது, என உத்தரவிட்டது ?? அதிகபட்சம் ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய வழக்கு ஆறு ஆண்டுகளாக இழுப்பு ..... ஆனா நாம சொல்லிக்கிறது மிகப்பெரிய ஜனநாயக நாடு ன்னு ......
முதலில் டிவி சீரியல்களுக்கு தணிக்கை கொண்டு வரவேண்டும். எந்த வித கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் நினைத்ததை உருவாக்கி வருகிறார்கள். மேலும் குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை. இயக்குனர்கள் தாங்கள் நினைத்ததை செய்கிறார்கள். இதை கட்டுப்படுத்த வேண்டும்மேலும்
-
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
-
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
-
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
-
விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி
-
கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு