மருதுபாண்டியர் ஜெயந்தி விழா

திருநகர்: திருநகர் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை சார்பாக மருதுபாண்டியர் ஜெயந்தி விழா கொண்டாட்டப்பட்டது.

அறக்கட்டளை தலைவர் சசிக்குமார் தலைமையில் மருதுபாண்டியர் படத்துக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் சரவணன், அழகு சுந்தரபாண்டியன், முத்துராஜ், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். அவனியாபுரத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் முருகன், ஆறுமுகம், பெரியசாமி, சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement