அலுவலகங்கள் திறப்பு

மேலுார்: மேலுார் தொகுதியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கட்டிய அலுவலகங்களை அமைச்சர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். வஞ்சிநகரத்தில் ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், முருகன் பட்டியில் ரூ.36 லட்சத்தில் 2 வகுப்பறைகள், அம்பலகாரன்பட்டி, திருவாதவூரில் தலா ரூ. 5 லட்சத்தில் பொது சேவை மையம், ரூ.30 லட்சத்தில் கட்டிய ஊராட்சி அலுவலகம் போன்றவற்றை அமைச்சர் திறந்ததார்.

அதற்கு முன்பாக மேலுார் அரசு மருத்துவமனையில் புழுக்கள் கிடந்த உணவால் உடல் நல குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெறும் துாய்மைப் பணியாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இதில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சதீஷ் பாபு, சுகாதார அலுவலர் பொற்செல்வன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாலாட்சி, ஆர்.டி.ஓ., சங்கீதா, மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள் பங்கேற்றனர்.

Advertisement