10 ஆயிரம் பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி, 10 ஆயிரம் பெண்களுக்கு, கறவை மாடுகள் வழங்க, 57 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
'தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், ஒவ்வொரு ஆண்டும், தகுதி வாய்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கு, இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் வகையில், 2026 - 27ம் நிதியாண்டில், 10 ஆயிரம் கறவை மாடுகள் வழங்க, 57 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பெண்ணுக்கும், தினமும் குறைந்தபட்சம், எட்டு லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள, கலப்பின கறவை மாடு வழங்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இல்லாத மின்சாரத்தை மக்களுக்கு எப்படி இலவசமாக கொடுப்பீர்கள்; சீமான் கேள்வி
-
பேரிடர் கால மீட்புக்கான உபகரணங்கள் தயார்: எஸ்.பி., பார்வை
-
அறிவிக்கப்படாத 'திடீர்' மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வலியுறுத்தல
-
சிதம்பரத்தில் 30ம் தேதி ரயில் மறியல் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
-
ரயில் பெட்டிகளில் இரவு 11:00 மணிக்கு சார்ஜிங் வசதி 'கட்'
-
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement