மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? அமைச்சர்களிடையே போட்டா போட்டி
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன், எம்.பி., விஷ்ணுபிரசாத் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதாகவும், விழா பகல் 2 மணிக்கு நடைபெறும் என அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அதனையொட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ராஜ்குமார், பகல் 2:00 மணியில் இருந்து விருத்தாசலம் விருந்தினர் மாளிகையில் காத்திருந்தார். உயர்கல்வி துறை அமைச்சர் வருவதற்கு கால தாமதம் ஆனதால், விருத்தாசலத்தில் கடை திறப்பு விழா மற்றும் விபத்து ஒன்றில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிராம மக்களை விசாரித்து விட்டு, தொழுதுார் புறப்பட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு மாலை 5 மணிக்கு உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழாவிற்கு வந்து, தாமதத்திற்கு மாணவர்களிடம் மன்னிப்பு கோரி, பட்டங்கள் வழங்கினார்.
இதேபோல், கடலுாரில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் உயர்கல்வி துறை அமைச்சரும், மறுநாள் அமைச்சர் ராஜ்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தனித்தனியே பட்டம் வழங்கினர். இதனால், இருவரும் ஒரேமேடையில் சந்திப்பதை தவிர்த்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறுகையில், இரண்டு அமைச்சர்களும் கடலுார் சொந்த மாவட்டம் என்பதால், தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டிபோட்டுக்கொள்கின்றனர். மேலும், உயர்கல்வி துறை அமைச்சர் சொந்த மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக கூறி வருகின்றனர். இதனால், இரண்டு அமைச்சர்களுக்கிடையே பனிப்போர் நடந்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும்
-
இல்லாத மின்சாரத்தை மக்களுக்கு எப்படி இலவசமாக கொடுப்பீர்கள்; சீமான் கேள்வி
-
பேரிடர் கால மீட்புக்கான உபகரணங்கள் தயார்: எஸ்.பி., பார்வை
-
அறிவிக்கப்படாத 'திடீர்' மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வலியுறுத்தல
-
சிதம்பரத்தில் 30ம் தேதி ரயில் மறியல் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
-
ரயில் பெட்டிகளில் இரவு 11:00 மணிக்கு சார்ஜிங் வசதி 'கட்'
-
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்