மீனவர்கள் பூர்வீக உரிமைகள் திட்டத்தில் சேர்க்க கோரிக்கை
புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில், விடுப்பட்ட மீனவர்களின் உரிமைகளை சேர்க்க முதல்வருக்கு கோரிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு, புதுச்சேரி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்செல்வன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
காரைக்கால் மாவட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில், கடற்கரையில் மீனவர்களின் பூர்வீக உரிமைகள் பகுதிகள் சுற்றுலாவுக்கென பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்ச்சேரிமேடு, பட்டினச்சேரி, கருக்கலாச்சேரி ஆகிய கிராமங்களில் கரைவலை மீன்பிடித் தொழில் செய்யும் இடங்கள் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை.
சுற்றுலாவுக்கான ஒதுக்கப்பட்டுள்ள மீனவர்களின் பூர்வீக உரிமை பகுதிகளை மீனவர்களின் பொதுச் சொத்துகள் என வரை திட்டத்தில் சேர்க்க வேண்டும். மீனவர்களின் பூர்வீக உரிமைகளை கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
காங்-தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு; வீடியோ வெளியிட்டு பாஜ கண்டனம்
-
தாமதமாக துவங்கிய மழை நெல் நாற்றுக்கு தட்டுப்பாடு
-
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வரவேற்பு
-
காணாமல் போன வரத்து கால்வாய்
-
அலுவலகங்கள் திறப்பு
-
சிறைகளில் என்னென்ன பாதுகாப்பு: சிறு அலட்சியமும் தீவிரமாக கருதப்படும் என டி.ஜி.பி., எச்சரிக்கை