அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
- நமது நிருபர் -
அதி தீவிர புயலாக 'அர்னாப்' ஏனாம், காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. ஆந்திராவில் மணிக்கு 165 கி.மீ., வேகம் வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் - பபத்லா, ஏனாம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நீடித்த அர்னாப் புயல் அதிதீவிரப் புயலிலிருந்து தீவிரப் புயலாக வலுவிழந்தது. ஆந்திரா, ஏனாம் கடலோரப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 28) காலை 8:30 மணிக்கு கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது; மணிக்கு 125-135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
விடுமுறை
புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி, காக்கிநாடா, விஜயநகரம், விசாகப்பட்டினம், எலுரு, அனகப்பள்ளி மற்றும் போலவரம் ஆகிய இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒடிசாவின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
rajkaran - ,
28 அக்,2026 - 09:38 Report Abuse
நான் சமூக வலைதளத்தில் வீடியோவை பார்த்தேன் ஆந்திராவில் பல இடங்களில் மரங்கள் முறிந்து இருக்கிறது 0
0
Reply
மேலும்
-
காங்-தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு; வீடியோ வெளியிட்டு பாஜ கண்டனம்
-
தாமதமாக துவங்கிய மழை நெல் நாற்றுக்கு தட்டுப்பாடு
-
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வரவேற்பு
-
காணாமல் போன வரத்து கால்வாய்
-
அலுவலகங்கள் திறப்பு
-
சிறைகளில் என்னென்ன பாதுகாப்பு: சிறு அலட்சியமும் தீவிரமாக கருதப்படும் என டி.ஜி.பி., எச்சரிக்கை
Advertisement
Advertisement