ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

1

திருவனந்தபுரம்: அர்னாப் புயல் எதிரொலியாக, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே. நாக ரத்னா கூறியதாவது: புயல் காரணமாக, கோனசீமா மற்றும் அதை ஒட்டிய காக்கிநாடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக காற்று வீசியது; அர்னாப் புயல் எதிரொலியாக, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு இன்று முதல் நாளை காலை வரை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம், குடிநீர் விநியோகம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு, மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில், அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
@block_G@

கரையை கடந்தது!



அர்னாப் புயல் அதிதீவிரப் புயலிலிருந்து தீவிரப் புயலாக வலுவிழந்தது. ஆந்திரா, ஏனாம் கடலோரப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 28) காலை 8:30 மணிக்கு கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.block_G

Advertisement