புதுச்சேரி - காரைக்காலுக்கு ரயில் இயக்க கவர்னரிடம் மனு
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு ரயில் இயக்க கவர்னர் கைலாஷ்நாதனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் இணை செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கவர்னரிடம் வழங்கிய மனு:
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், கடலுார், சிதம்பரம் வழியாக காரைக்காலுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். தினந்தோறும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு இயங்கும் மெமு ரயிலை, காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.
இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கினால், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், கடலுார் பாடலீஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், சீர்காழி சட்டநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், திருநள்ளாறு சனி பகவான் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில் ஆகிய புனித இடங்களை காண பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கம்.
புதுச்சேரி கோர்ட்டு பயன்பாட்டிற்கு செல்பவர்களுக்கம், ஜிப்மர் வரும் நோயாளிகளுக்கும், வணிக வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு கூறப்படுள்ளது.
மேலும்
-
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அறநிலையத்துறை நியமிப்பதை உறுதியாக அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
-
100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்