சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி கொடைக்கானல் வெறிச்சோடியது
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பயணிகள் வருகையின்றி முக்கிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின.
சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். கடந்த வாரங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையால் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.
இதற்கிடையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சில தினங்களாக கனமழை பெய்தது. மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடைக்கானல் வருகைக்கு அக்.,24, 25 ஆகிய இரு தினங்கள் தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் பயணிகள் வருகையின்றி அங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில் கொடைக்கானலில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. வழக்கத்திற்கு மாறான குளிரை சமாளிக்க அங்குள்ளோர் ஸ்ெவட்டர் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து நடமாடினர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு