குழியை மூடி சமன் செய்தால் வாகனம் நிறுத்தலாம்
கோத்தகிரி:கோத்தகிரி காவல் நிலைய குடியிருப்பு பகுதியில் உள்ள, குழியை மூடி சமம் செய்தால், வாகனங்கள் நிறுத்துவதற்கான தளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கோத்தகிரி நகரில், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய 'பார்க்கிங்' வசதி இல்லை. இதனால், சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. கிராமப்புறங்களில் இருந்து காலை நேரத்தில் வருபவர்கள், சாலை ஓரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, சமவெளி பகுதிக்கு செல்வதும், இரவில் வந்து வாகனங்களை எடுப்பதும் வழக்கமாக உள்ளது. இதனால், காலம் கடந்து வருபவரகள் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. அவசர தேவைக்கு, 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்தும் பட்சத்தில், போலீசாரின் அபராதத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், கோத்தகிரி நகரப் பகுதியில், வருவாய், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலியிடங்களை சமன் செய்தால், வாகனங்கள் நிறுத்த போதிய தளம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
இரண்டு முறை மரணத்தில் இருந்து தப்பித்தார் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார்!
-
ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு திட்டம் நாளை துவக்கம்; என்னென்ன பொருள் தெரியுமா?
-
ஜிஎஸ்டியில் மாற்றம், வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு; நவ.,1ல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு