எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
பெங்களூரூ: கர்நாடகாவில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சுமார் ஒரு கோடி வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 5.54 கோடி வாக்காளர்களாக இருந்த பட்டியல், 4.55 கோடியாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் எஸ்ஐஆர் பணிகள் சிறப்பாக நடந்ததாகவும், போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் கூறியதாவது; காங்கிரஸ் கட்சியின் போராட்டம், பயிற்சியின் காரணமாக கர்நாடகாவில் எஸ்ஐஆர் பணிகள் மிகச்சிறப்பாக நடந்துள்ளது. இறந்தவர்கள், இரட்டை ஓட்டு கொண்டவர்களின் விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பீஹார் போன்ற பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகளின் மீது தான் ஆட்சேபணை எழுந்து வருகிறது. கர்நாடகாவில் நடத்தப்பட்டது போன்று மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு கூறினார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் மூலம் ஓட்டு திருடப்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இதைக் கண்டித்து நவ.,1ம் தேதி டில்லி ராம் லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி சார்பில் போராட்டமும் நடத்தப்பட இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், எஸ்ஐஆர் பணிகளை பாராட்டி காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது அக்கட்சியின் உள்ளே விவாதத்தை கிளப்பியுள்ளது.
மேலும்
-
பாலியல் வழக்கில் சிக்கிய எஸ்.பி.,க்கு முன் ஜாமின்
-
கலை, அறிவியல் படிப்புகளுக்கு விருப்ப தேர்வு பட்டியல் வெளியீடு
-
வீடு விற்பதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி
-
பண்ருட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட 4 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
-
நவ., 1ல் மணல் லாரிகள் வேலை நிறுத்தம்
-
பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்