அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
கூடலுார்: முதுமலை மசினகுடி பகுதியில் அடுத்தடுத்து, 4 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
முதுமலை, மசினகுடி வனக்கோட்டங்கள் வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால், கடந்த மாதம் வறட்சியின் தாக்கம் ஏற்பட்டது. வனத்துறையினர் கவலை அடைந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகம், தெங்குமரஹாடா கூக்கல்தொரைஹல்லா வனப்பகுதியில், 17ம் தேதி, 3 வயது பெண் குட்டி யானை உயிரிழந்தது.
சிங்கார வனச்சரகம், பொக்காபுரம் அருகே பிதர்கட்டாகேர் பகுதியில், 16ம் தேதி படுத்த நிலையில் உயிருக்கு போராடிய, 25 வயது ஆண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி, 18ம் தேதி உயிரிழந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மசினகுடி மாவனல்லா குறும்பர் பள்ளம், பகுதியில், 36 வயது ஆண் காட்டு யானை இறந்து, 24ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக யானை இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகம், தெங்குமரஹாடா வனப்பகுதியில், 27ம் தேதி காட்டு யானை இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 55 வயது பெண் யானை, கனமழையின் போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, மரத்தில் சிக்கி உயிரிழந்தது. இதுபோல, அடுத்தடுத்து நான்கு யானைகள் உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள வனவிலங்கு ஆர்வலர்கள், யானைகள் இறப்பு குறித்து ஆய்வு செய்ய வனத்துறைக்கு மனு அளித்து வலியுறுத்தி உள்ளனர்.
மசினகுடி துணை இயக்குனர் வித்யாதார் கூகையில், '' இப்பகுதியில் சில வாரங்களில் இருந்த யானைகள், இயற்கையாகவே வெவ்வேறு இடங்களில் யானைகள் உயிரிழந்துள்ளன. இறந்த யானைகளின் உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்த பின், அடுத்த கட்டம் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு