' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
ஊட்டி: ‘புகையிலை இல்லா இளைஞர்கள்;-ஆரோக்கியமான நீலகிரி என்ற இலக்கை அடைய அனைத்து தரப்பினர் ஒத்துழைக்க வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் , மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி, ‘புகையிலை இல்லா இளைஞர்கள் இயக்கம்–4.0 ' கடந்த 28ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இதற்கான விழிப்புணர்வு டிச ., 26 ம் தேதி வரை, 60 நாட்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. புகையிலை பொருட்களின் பயன்பாட்டினால் இந்தியாவில் ஆண்டுதோறும், 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரங்களில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுத்து, புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆறு முக்கிய நடவடிக்கைகள்:
இம்மாவட்டத்தில் , பொதுமக்களிடையே, ‘புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் ; கிராமங்கள் ; புகையிலை தடுப்பு சட்டம் அமலாக்கம் ; சமூக ஊடக விழிப்புணர்வு ; கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு,’ என, ஆறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நடவடிக்கைகள் மாவட்ட சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்புகள், இளைஞர் நலத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
முன்னதாக, கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், புகையிலை இல்லா இளைஞர்கள் இயக்கம் 4.0 ' சிறப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அரசு துறை அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,‘‘புகையிலை இல்லா இளைஞர்கள் -ஆரோக்கியமான நீலகிரி ' என்ற இலக்கை அடைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் , இளைஞர்கள் , பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்வியக்கத்தில் முழுமையாக பங்கேற்று புகையிலை இல்லா மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ என்றார்.
மேலும்
-
சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்
-
வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு
-
கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
-
தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 13 பேர் பலி
-
நெடுஞ்சாலைகளில் 120 கிமீ வேகத்தில் பயணம்: அபராதம் கூடாது என நிதின் கட்கரி அறிவுரை