புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரசாரம் 4.0: முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
புதுச்சேரி: புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரசாரம் 4.0வை, முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலகில் புகையிலை பயன்பாட்டினால், 12ல் ஒருவர் பலியாகிறார். இந்தியாவில், புற்றுநோய் பாதிப்பால் இறப்பவர்களில் 40 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துபவர்கள்.
புகையிலை பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், ‘புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரசாரம் 4.0 வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, புதுச்சேரி சுகாதாரத்தறை, தேசிய சுகாதார இயக்கம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, ‘புகையிலை இல்லா இளைஞர் நலன் 4.0 பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு காணொலி வாகன பிரசாரம் துவக்க விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறவன வளாகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். அழகானந்தம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
விழாவில், சுகாதாரத்துறை செயலர் குமார், கலெக்டர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ கல்லுாரி, ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டு புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
வரும் டிசம்பர் 26ம் தேதி வரை 60 நாட்கள் இப்பிரசாரம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, மாநில ஆலோசகர் சூரியகுமார் செய்திருந்தார்.
மேலும்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
-
தவெக ஆட்சியில் மக்களுக்கு பரிசு விலைவாசி உயர்வு: இபிஎஸ் பேட்டி
-
லஞ்ச வழக்கில் புழல் சிறையில் மகேஷ்; 2வது முறையாக சந்தித்தார் உதயநிதி
-
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; தலைமறைவாக இருந்த முன்னாள் தவெக நிர்வாகி கைது
-
இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு
-
2028க்குள் மின்வாரியத்தில் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி