2028க்குள் மின்வாரியத்தில் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
சென்னை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.
பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மின்வாரியத் தலைவர், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதில், புதிய நியமனங்களால், ஆண்டுக்கு 341.26 கோடி ரூபாய் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட பதிவில்; மின்வாரியத்தில் காலியவுள்ள 8 ஆயிரம் களஉதவியாளர்கள் பணியிடங்களில், 5 ஆயிரம் பணியிடங்கள் 2027லும், 3 ஆயிரம் பணியிடங்கள் 2028லும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாயிலாக நிரப்பப்படும், என உறுதியளித்துள்ளார்.
வாசகர் கருத்து (1)
Vasan - ,இந்தியா
29 அக்,2026 - 18:25 Report Abuse
அவர்கள் எப்பொழுது தேர்வு எழுதி, எப்போது தேர்வு முடிவு வெளியாகி, எப்போது நேர் காணல் நடந்து, எப்போது பணியில் சேர்ந்து, எப்போது அனுபவம் பெற்று, எப்போது பிரச்சினைகளை தீர்ப்பது? இவ்வளவு வெற்றிடங்களை நிரப்பாததற்கு இதற்க்கு முன் ஆண்ட இரண்டு கலகங்கழுமே காரணம். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement