மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

4

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், இன்று (அக்டோபர் 29) முதல்வர் விஜய் தலைமையில்,

தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், பருவ மழை பாதித்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சட்டம், ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு 3 முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கி இருக்கிறார்.

அது பின்வருமாறு:

* மக்களுக்கு என்ன தேவையோ அதற்குத்தான் அமைச்சர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் அனைவரும் செயல்பட வேண்டும்.

* மக்களுக்கான சாலை வசதி குடிநீர் வசதி தொடர்பான பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

@block_P@

கரப்ஷன் இல்லை!



தமிழக அரசின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையுடன் கவனமாக செயல்பட வேண்டும்; கமிஷன் இல்லை, கரப்ஷன் இல்லை என்பதில் உறுதியாக இருக்குமாறு அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.block_P

பிரத்யேக வீடியோ!

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement