இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு
-நமது சிறப்பு நிருபர்-
நடுவானில் பயணியர் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சார் மற்றும், 'ப்ளை துபாய்' விமான நிறுவன சிப்பந்திகளின் வீரதீரத்தை பாராட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் விருது வழங்கி கவுரவித்தார். அதிபர் நஹ்யானுக்கும் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கும் இடையேயான உரையாடல் இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை பெற்றது.
@instagram@https://www.instagram.com/reel/DfDNigkME5Y/?utm_source=ig_web_button_share_sheet
instagram
அந்த வீடியோவில் "நீங்கள் எப்போது குணமடைவீர்கள்?" என்று அதிபர் மச்சாரிடம் கேட்கிறார். அதற்கு இந்திய விமானி மச்சார், இரண்டு மாதங்கள் ஆகும் என்று பதிலளிக்கிறார். "எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. நீங்கள் குணமடைந்ததும், எப்படி சண்டையிடுவது என்று நான் உங்களுக்கு போர் பயிற்சி அளிக்க நான் விரும்புகிறேன்," என்று யுஏஇ அதிபர் அவரிடம் கூறுகிறார்.
“இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்,” என மச்சார் பதிலளித்தார். வைரலான மற்றொரு வீடியோவில், அவர் மச்சாரைக் கட்டிப்பிடித்து, அவரது தலையில் உள்ள தையல்களை யுஏஇ அதிபர் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பல்வேறு தரப்பினர் பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.
இப்பொழுதாவது நம்முடைய தீமாகி நக்சல்கள் , ராகுல், விசயண்ணா சுடலை , மமதா, , யாதவ் வகைறாக்கள் வாய் திறந்து பாராட்டுவார்களா அல்லது ஒட்டிழப்புக்கு அஞ்சி வாயை மூடிக்கொள்வார்களா?
அபுதாபி பிஏபிஎஸ் BAPS இந்து கோவிலில் ஏழு கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு கோபுரங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு எமிரேட்டுகளை மாநிலங்களை குறிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இக்கோவிலில் உள்ள முதன்மை சன்னதிகளில் பின்வரும் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்:
• சுவாமிநாராயண் மற்றும் குணாதிதானந்த் சுவாமி மத்திய சன்னதி
• ராதா - கிருஷ்ணர்
• சீதா - ராமர் லட்சுமணர் மற்றும் அனுமனுடன்
• சிவன் - பார்வதி விநாயகர் மற்றும் முருகனுடன்
• வெங்கடாசலபதி பத்மாவதி தாயாருடன்
• ஜெகந்நாதர் சுபத்ரா மற்றும் பலராமனுடன்
• ஐயப்பன்
நம் தலையில் யாரேனும் கொட்டினால் நாம் துடித்துவிடுவோம், அதுவும் ஒரு சிறு கோடாரியால் வெட்டினால் எப்படி தாங்கமுடியும். இந்த வகை கோடாரி நமது பேருந்துகளில் அவசர தேவைக்காக ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும். அதைவிட அளவில் பெரிய கோடாரி விமானத்தில் இருக்கும். அதையும் மீறி ஸ்மிட் போராடி பயணியரை காத்தது அந்த ஹனுமான் மந்திரம்தான்.
சுமித் மச்சரிடம் இந்து மத சனாதன தர்மம் படிக்க கற்று கொள்ளுங்கள். எப்போதும் போரிட்டு உயிர்களை கொல்லும் அரபு கலாச்சாரம் வேண்டாமே...எங்களுக்கு.
எப்படி சண்டையிடுவது என்பதை வேண்டுமானால் நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுக்கலாம். மிகவும் இக்கட்டான நேரத்தில் தலை மற்றும் உடல் முழுவதும் காயம் பட்டும் உயிர் போகும் வலியுடன் ஜாதி ,மதம் பார்க்காமல் பிற உயிர்களை எப்படி காப்பாற்றுவது என்ற இந்து மத சனாதன கோட்பாட்டை அவர் ஏற்கெனவே இந்த உலகிற்கே கற்றுக் கொடுத்து விட்டார்!மேலும்
-
டிஜிட்டல் மோசடியால் ஏற்படும் இழப்பை கண்டறிவது வங்கிகளின் பொறுப்பு: சுப்ரீம் கோர்ட்
-
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்
-
தேசத்துரோக வழக்கில் திருநெல்வேலி கோர்ட்டில் சீமான் ஆஜர்
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்க முயற்சி: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
-
ஒரே நாளில் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்; மாற்றுத்திறனாளி தினேஷூக்கு பணி நியமன ஆணை