கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; தலைமறைவாக இருந்த முன்னாள் தவெக நிர்வாகி கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரியின் குலசேகரம் பகுதியில் பஸ்ஸூக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு தவெக குமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் 'லிப்ட்' கொடுத்து உதவியுள்ளார். அப்போது, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி கூச்சலிட்டதால், கிறிஸ்டோபர் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர் தவெகவில் இருந்து நீக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர்.
ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement