வேட்டைக்கருப்பசாமி கோவில் 'அங்காடி வேலா' கமிட்டி தேர்வு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேட்டைக்கருப்பசாமி கோவில் 'அங்காடி வேலா' திருவிழாவை, சிறப்பாக கொண்டாடும் வகையில் புதிய விழா கமிட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதிய கமிட்டியின் தலைவராக முருகானந்தன், துணைத்தலைவராக ஆனந்தன், செயலாளராக பாபு, இணை செயலாளராக சிவமணி, பொருளாளராக பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து தமிழ் சமுதாயங்களின் ஒத்துழைப்புடன், சமூக ஒற்றுமையுடன், 2027 ஏப்., மாதம் நடக்கும் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, புதிய நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement