புறநகர் ரயில் மகளிர் பெட்டிகளில் ஆண்கள் பயணம்; பெண்கள் அவதி
சென்னை: புறநகர் ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கான குறியீடுகள் அழிந்திருப்பதால், அவற்றில் ஆண்கள் பயணம் செய்கின்றனர். இதனால், பெண்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில், சென்ட்ரல், கடற்கரை – செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் தினமும் 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன; லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.
புறநகர் ரயில்களில் முதல், இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன், பெண்களுக்கென தனிப் பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் வெளிப்புறத்தில் குறியீடுகள் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், சில ரயில்களில் குறியீடுகள் இல்லாமலும், சிலவற்றில் அழிந்தும் காணப்படுகின்றன. மேலும், ஒரு சில பெட்டிகளில் ஒரு புறத்தில் மட்டுமே குறியீடுகள் இருப்பதால், மறுபுறத்தில் இருந்து ஏறும் பயணியரால் மகளிர் பெட்டியை அடையாளம் காண முடியவில்லை.
எனவே, அனைத்து புறநகர் ரயில்களிலும் மகளிர் பெட்டிகளின் இருபுறங்களிலும் தெளிவான குறியீடுகளை அமைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
அரசு விழாவில் ஆளும்கட்சியை பாராட்டிய அதிமுக எம்எல்ஏ; விழபோகிறதா அடுத்த விக்கெட்?
-
நோட் பண்ணிக்கோங்க; மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஜன., 10ல் தொடக்கம்
-
தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
-
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
-
போதை மாத்திரை கடத்தல் 2 பேர் கைது
-
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்