அரசு விழாவில் ஆளும்கட்சியை பாராட்டிய அதிமுக எம்எல்ஏ; விழபோகிறதா அடுத்த விக்கெட்?

8



கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் நடந்தது. கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, கலெக்டர் கந்தசாமி முன்னிலையில், காங்கேயம் தொகுதி அதிமுக எம்எல்ஏ நடராஜ் பேசியதாவது:

எம்ஜிஆர் ஜெயலலிதா, இபிஎஸ் ஆட்சி காலங்களில் நெசவாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், குடியிருப்புகள், நிதி ஒதுக்கீடு போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோல, தற்போது ஆளும் தவெக அரசும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை, அனைத்து வகையிலும், மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இத்தகைய மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வரும் அரசுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நெசவாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியான சென்னிமலையில், நெசவாளர் பூங்கா அமைத்து தர அமைச்சர், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக எம்எல்ஏ நடராஜ், அரசு விழாவில், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை வெளிப்படையாக பாராட்டி பேசியது, அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், அதிமுகவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

காங்கேயம் எம்எல்ஏ நடராஜ், ஏற்கனவே தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்; பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் இபிஎஸ் தரப்புக்கு திரும்ப வந்தவர்.

Advertisement