நோட் பண்ணிக்கோங்க; மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஜன., 10ல் தொடக்கம்

-நமது நிருபர்-

நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன்பின், 2021ம் ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

16 ஆண்டுகளுக்கு பின், அடுத்த ஆண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதல்முறையாக, 'டிஜிட்டல்' வழியாக நடத்தப்படுகிறது. வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என, இரு கட்டங்களாக நடத்தப்படும்.

அந்த வகையில், வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு, 'ஆன்லைன்' வாயிலாக சுயமாக பதிவேற்றம் செய்ய, கடந்த ஜூலை 17 முதல் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், ஆக., 1 முதல் 31 வரை வீடு வீடாக சென்று விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

அடுத்த ஆண்டு ஜனவரி 25ல், வீடு வீடாக சென்று, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி வரை, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளன.

Advertisement