அரசு ஊழியர்கள் தர்ணா

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே தர்ணா நடந்தது.

அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளை உடனே வெளியிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜெசி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் நன்றி தெரிவித்தார்.

Advertisement