மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
கோவை: ஒண்டிப்புதூர் மின் வாரிய பிரிவு அலுவலகத்தில், மின் இணைப்பை சரண்டர் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டிய, டெபாசிட் தொகை ரூ. 12.5 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளது.
மின் வகை மாற்றம், மீட்டர் ஷிப்டிங், மின்கம்பம் மாற்றுதல், மின் வழித்தட மாற்றம், டிரான்ஸ்பார்மர் நிறுவுதல் உள்ளிட்ட வேலைகளுக்கு சம்மந்தப்பட்ட மின்பிரிவு அலுவலகத்துக்கு ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்த வேண்டும்.
இது தவிர புதிய மின் இணைப்பு, மின் பளு உயர்த்துதல் போன்றவற்றுக்கு கூடுதல் தொகை டெபாசிட் செய்ய வேண்டும். சில காரணங்களால் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டால், மின்வாரிய நடைமுறைப்படி விண்ணப்பித்தாலும் தொகையை மின்வாரியம் திருப்பித் தருவதில்லை; பல காரணங்களை சொல்லி தாமதப்படுத்துவதாக, நுகர்வோர் கூறுகின்றனர்.
கோவை மெட்ரோ எல்லையிலுள்ள ஒண்டிப்புதூர் மின்பிரிவு அலுவலக பகுதிகளில், உயர் மற்றும் தாழ்வு மின் இணைப்பு, வீடு, வர்த்தகம், சிறு, குறு தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் என்று 8,405 மின் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டன.
மின் இணைப்பு பெற செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற மின்வாரிய விதிமுறைப்படி, 500 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அபிடவிட் தாக்கல் செய்த ஏராளமான விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. டெபாசிட் தொகையும் திரும்ப வரவில்லை.
ஒண்டிப்புதூர் துணை மின்நிலைய நிர்வாக பொறியாளர் பிந்துவிடம் இது குறித்து நமது நிருபர் கேட்டார். அதற்கு அவர், "தற்போது வரை 8,405 பேரின் மின் இணைப்பை சரண்டர் செய்துள்ளனர். இவர்களுக்கு 12.57 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. இதில் பல மின் இணைப்புதாரர்களின் வீடுகள் இடிந்து சிதிலமடைந்து உள்ளன. பலர் எங்கு இருக்கின்றனர் என்றே தெரியவில்லை. தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. டெபாசிட் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, தொகையை கொடுப்பதற்கான வேலைகள் நடக்கின்றன; விரைவில் வழங்கி விடுவோம்" என்றார்.
மின் இணைப்பு பெறுவோரிடமிருந்து டெபாசிட் என்ற பெயரில் வசூல் செய்த பணத்திற்கு வட்டியும் வழங்க வேண்டும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?மேலும்
-
மகேஷ் கைதின் போது போலீசாருக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ சேகர்பாபுக்கு சம்மன்
-
தங்கம் சவரனுக்கு ரூ.1,240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
சென்னையில் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
-
சொந்த புத்தியும், சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி தவெக அரசு; ஸ்டாலின் விமர்சனம்
-
இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்து சிதறிய 4 எண்ணெய் கப்பல்கள்; மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்