அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நற்பெயரை பரப்புவதற்கும், அதுகுறித்த தவறான பிரசாரங்களை முறியடிப்பதற்கும், 'ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்' என்ற அமைப்பு, அந்நாட்டு நீதித்துறையில் முறைப்படி பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அவற்றின் சார்பாக இயங்கும் குழுக்கள், அந்நாட்டின் 'வெளிநாட்டு ஏஜென்ட்கள் பதிவுச் சட்டம்' (FARA) கீழ் பதிவு செய்வது கட்டாயம்.
அவதூறுகளுக்கு 'செக்':
இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து பரப்பப்படும் முழுமையற்ற, தவறான தகவல்களுக்குச் சரியான விளக்கங்களை அளிப்பது, உண்மை நிலையை அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைப்பது, கல்வி மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவையே எங்களின் முக்கிய நோக்கம்' என்று அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், பொது மக்கள், ஊடகவியலாளர்கள், கல்வி நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சட்டப்பூர்வமாகத் தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., குறித்த உண்மைத் தகவல்களைப் பகிர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஊதிய ஒப்பந்தம் இல்லை:
டில்லி ஆர்.எஸ்.எஸ்., தலைமைக்கும், தமக்கும் இடையே நேரடி ஊதிய ஒப்பந்தமோ அல்லது எழுத்துப்பூர்வ ஏஜென்சி ஒப்பந்தமோ இல்லை என்றும்; அதேநேரம் ஆர்.எஸ்.எஸ்., மீதான நன்மதிப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அடிப்படையிலேயே தாமாக முன்வந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவை மையமாகக் கொண்ட தன்னார்வ, சமூக-கலாசார அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., இதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்கள் குழுவில் ராஜேந்திர சோனாரிகர், ஜெயந்த் பந்த், தேவானந்த கத்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க மண்ணில் இந்திய கலாசாரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள் குறித்த தவறான சித்தரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 'ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்' அமைப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கி பிதுங்கி என்று வேண்டுமென்று வேண்டாத வெறுப்புகளைத் தூண்டும் அமைப்புகளின் முகத்தில் கரி பூசும் விதமாக ஆர் எஸ் எஸ் அமைப்புக்கள் அனைத்துலகிலும் கால் பதித்து தங்களை பற்றிய தவறான எண்ணங்களை சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சமூக சேவை செய்து பாராட்டுக்கள் பெறவேண்டும். வாழ்த்துக்கள்.
உண்மை பேசுகிறோம் நாம். நல்ல அமெரிக்க மக்களுக்கு நன்கு தெரியும். எல்லாம் இறைவன் செயல்.
வரவேற்போம், வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்.
அமெரிக்காவில் பதிவு செய்யும் போது நம் நாட்டிலும் ஏன் பதிவு செய்யக் கூடாது
ஞானம்... அது உனக்கு பெயரில் உள்ளது இல்லையே. என்ன செய்ய..
சூப்பர் கேள்வி ஆனால் சங்கிகளிடம் இருந்து ஆக்கபூர்வ பதில் வராது தனி நபர் வசை பாட மட்டும் தெரியும்
இருளிலிருந்து ஒளியை நோக்கி
வெற்றி பாதையில் பாரத நாடு
வேள்வி இதனில் ஆகுதி ஆவோம்
வெற்றியைக் காண்போம் உறுதியிதே
உண்மையான மனசாட்சியுள்ள அமைப்பு ஆர் ஸ் ஸ் . எல்லோரும் சேரலாம் உலகத்திற்கு தேவையான அமைப்பு இன்றைய சூழலில் மக்களுக்கு நல்ல செயல்களில் ஈடுபட சிறந்த அமைப்பாகும்.
ஆனால் அங்கெல்லாம் துப்பாக்கி வைத்துக் கொள்வது சே:.ப்டி
அதோடு , ஊருக்கு ஒரு அம்மன் கோவிலும் , தெருவுக்கு ஒரு பிள்ளையார் கோவிலும் வைக்கலாம் , புதிதாக உருவாகும் எல்லா குடியிருப்புகள் தோறும் , ஒரு பிளாட்டை வாங்கி, அங்கேயும் அம்மன் கோவில் பிள்ளையார் முருகன் கோவில்களை கட்டி வழிபாடுகளை பிரபலப்படுத்தினால் நல்லது, - - இங்கே கிறிஸ்டின் கன்வெர்ட்டிங் கம்மனாட்டிகள் எப்படி ஒவ்வொரு ஏரியாவாக தேடி பிடித்து , ப்ரேயர் பண்றேன் , வியாதிகளை , சொஸ்தமாக்கிறேன் , இரும்பு பெட்டிகளை நிரம்ப பண்ணுகிறேன் , பரலோகத்தில் , நல்ல சிம்மாசனமாம் வாங்கி தர்றேன் , என்றெல்லாம் தெருத்தெருவா அலையிறங்க, அதெல்லாம் முறியடித்து , அமேரிக்கா ஐரோப்பா இங்கிலாந்து களில் இருந்து ஒரு பைசா கூட இங்கே கன்வெர்டிங்குக்கு கிடைக்காத படி செய்ய வேண்டும் , ,
இந்தியாவைப் பற்றிய தவறான கருத்துருக்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்துதான் கிளப்பி விடப்படுகின்றன. அதை முறியடிக்கவும், இந்தியா பற்றிய தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறியவும் தேசபக்தி ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் அமெரிக்காவில் நிச்சயம் தேவை.
Good movement, God bless you peopleமேலும்
-
மகேஷ் கைதின் போது போலீசாருக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ சேகர்பாபுக்கு சம்மன்
-
தங்கம் சவரனுக்கு ரூ.1,240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
சென்னையில் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
-
சொந்த புத்தியும், சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி தவெக அரசு; ஸ்டாலின் விமர்சனம்
-
இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்து சிதறிய 4 எண்ணெய் கப்பல்கள்; மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்