8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு

1

சென்னையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு சமூக நீதிக் கணக்காய்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளில் சமரசம் செய்து சான்றிதழ் வழங்கி ரூ.400 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் ஆட்களை நியமித்து பள்ளிகளில் வசூல் செய்துள்ளனர். தவறு செய்யும் திமுகவினரை கேள்வி கேட்க கூடாதா?

எங்களை மிரட்டிப் பணம் பறித்தார்கள் என திமுகவினர் மீது பள்ளிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம், 4 ஆயிரம் பள்ளிகளை மிரட்டிப் பணம் பறித்ததற்காக மகேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும். மிரட்டி பணம் பறித்த புகாரில் தான் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பழிவாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. பேராசிரியர் கலையரசனை போலீசார் அலைக்கழித்தது தவறு தான்; எதிர்பாராத விதமாக தவறு நடந்துவிட்டதாக பேராசிரியர் கலையரசனிடம் தெரிவித்துவிட்டோம். அவரின் பெயர், புகைப்படத்துடன் கமென்ட் பார்த்ததும் அவரின் முகவரியை கண்டறிந்து போலீசார் சென்றுள்ளனர். இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement